சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு வரை கார் விற்பனை தடை!

சாலையில் அதிகமான இயங்கும் கார்களின் எண்ணிக்கையை 0.25 சதவிகித நிலையில் இருந்து, பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது சிங்கப்பூர் அரசு. அதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி 2018 முதல் 2020 வரை கார் விற்பனையை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு. உலகின் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பிரதேசங்களில் ஒன்றான சிங்கப்பூரில் ஏற்கெனவே அதிக அளவில் வாகன நெரிசல் இருப்பதாகவும், மொத்த நிலப்பரப்பில் 12 சதவிகிதம், சாலைப்போக்குவரத்திற்கு உபயோகித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, புதிய சாலை வசதிகள் செய்வதற்கான நோக்கம் இல்லாத காரணத்தினாலேயே 2020 வரை புதிய கார் விற்பனையை நிறுத்தப்போவதாக விளக்கமளித்துள்ளது.

சிங்கப்பூரின் மக்கள்தொகை 2000ஆம் ஆண்டுக்கு பிறகு 40% அதிகரித்துள்ள நிலையில் 6 லட்சம் தனியார் மற்றும் வாடகை கார்கள் அங்கு இயங்குவதாக அந்நாட்டு போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தகவல் அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மூலம், கிடைத்துள்ள கால இடைவெளி வாயிலாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் தேவையை அறிந்து, திறம்பட செயல்பட்டு, நல்ல கார்களை உற்பத்தி செய்யமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,