வெளிவிவகார அமைச்சரின் ஆதரவை நாடும் மஹிந்த அமரவீர

2021ஆம் ஆண்டு இலங்கைக்கு சேதன உரத்தை ஏற்றிச் வந்த சீனக் கப்பலுக்கு ராஜதந்திர மட்டத்தில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்தியமை தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வை வெளிவிவகார அமைச்சு கோரவுள்ளது.
விவசாய அமைச்சில் நேற்று(10.11.2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இலங்கைக்கும், சீன அரசாங்கத்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சேதப்படுத்தாத வகையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வெளிவிவகார அமைச்சரின் ஆதரவை வழங்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அமரவீர, ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!