துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு – தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றது போலீஸ்

கனடாவின் டொரன்டோ நகரில் திடீரென மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். மர்ம நபர் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே நேற்று இரவு சந்தேகப்படும் வகையில் நடமாடிய மர்ம நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி சத்தம் கேட்டு போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது போலீசாரை நோக்கியும் அந்த நபர் சுட்டான். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த சண்டையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

மர்ம நபர் சுட்டதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!