பெண் போராளியாக நடிக்கும் ஜெனி ஜேம்ஸ்!

போராளி படங்கள் வரிசையில் உருவாகிறது ‘பாஞ்சாலி’. இப்படம் பற்றி இயக்குனர் ஏ.பி. சந்திரபோஸ் கூறும்போது,’பல வருடங்களாக போராடியும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நண்பர்கள் உதவியுடன் நானே தயாரிப்பாளராகி இப்படத்தை இயக்கினேன். குண்டடிபட்டு வரும் ஒரு தலைவனை உயிர்பிழைக்க வைக்க ஒரு முக்கிய விஷயம் தேவைப்படுகிறது. அதை பெண் ஒருவர் எப்படி கொண்டுவருகிறார். அதற்கிடையில் நடக்கும் தாக்குதல்களை சமாளிக்க முடிகிறதா என்பதே கதை. லெமுரியா கண்டம் என்ற கற்பனை இடத்தை இப்படத்தில் சித்தரித்திருக்கிறோம். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் இதுபோன்ற போராளி சம்பவங்கள் நடந்திருக்கிறது.

பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கும். விக்கிவரன் ஹீரோ. பெண் போராளியாக ஜெனி ஜேம்ஸ் நடித்திருக்கிறார். காட்டு பகுதி படப்பிடிப்பால் கடுமையான சவால்களை படக்குழு சந்திக்க வேண்டி இருந்தது. அதையும் மீறி படம் உருவாகி இருக்கிறது’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,