சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு: – இயற்கை ஆர்வலர்கள் மெய்சிலிர்ப்பு

உலகிலேயே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகப்பெரிய பாலைவனமான சஹாரா ஆப்ரிக்க கண்டத்தின் வடபகுதியில் 90 லட்சம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு வியாபித்துள்ளது. அங்கு பனிப்பொழிவால் பாலைவான சிகப்பு மணலின் மீது அழகாக வெள்ளை படலெமென பனி படர்ந்திருப்பது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. சுமார் 18 அங்குலம் அளவுக்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்பனிப்போர்வை போர்த்தியுள்ள சஹாரா பாலைவனம் இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பல ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட பனியால் அங்கு மீண்டும் பசுமையான சூழல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளா்கள் நம்புகின்றனர். கடந்த 37 ஆண்டுகளாக சஹாரா பாலைவனம் பனிப்பொழிவை கண்டதில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள் மிக குதூகலமாக பனிப்பொழிவை கொண்டாடியுள்ளனர். சஹாரா பாலைவனத்தில் நீண்ட 40 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,