டோன்ட் கேர்: – பிரேக்கிங் நியூஸ் வெளியிட்ட திரிஷா!

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் திரிஷா. தற்போது ‘மோகினி’ உள்ளிட்ட 3 படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்த படம் சாமி. திரிஷாவுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் மார்க்கெட்டை ஜிவ்வென உயர்த்திவிட்ட படம். இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகிறது. இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் திரிஷா. மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். திடீரென்று அப்படத்திலிருந்து விலகுவதாக திரிஷா அறிவித்தார்.

தனது கதாபாத்திரத்தைவிட கீர்த்தியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் விலகுவதாக திரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருடன் பட தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது அவரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர். அது பலன் அளிக்கவில்லை. தற்போது அவர் மீது புகார் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. திரிஷா ‘சாமி 2’ படத்தில் நடிக்க வேண்டும் அல்லது அவரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் திரிஷா நேற்று தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் ‘பிரேக்கிங் நியூஸ்…. டோன்ட் கேர்’ என்ற வாசகத்தை வெளியிட்டிருந்தார். தன் மீதான புகார் குறித்தே இதுபோல் அவர் கருத்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: