மீண்டும் இணையும் சசிகுமார் – சமுத்திரக்கனி?

`நாடோடிகள்’, `போராளி’ படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனியும், சசிகுமாரும் நட்பை மையப்படுத்திய படத்தில் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2009-ல் வெளியான படம் `நாடோடிகள்’.

சமுத்திரக்கனி இயக்கியிருந்த இந்த படத்தில் சசிக்குமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நட்பை மையப்படுத்தி, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் `போராளி’ படத்திலும் சசிகுமார் நாயகனாக நடித்தார். பின்னர் சமுத்திரக்கின இயக்கி, நடித்த அப்பா படத்திலும் சசிக்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த அளவுக்கு இவர்களுக்கிடையே நல்ல நட்பு இருக்கிறது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், சமுத்திரக்கனி அடுத்ததாக இயக்கும் படத்திலும் சசிகுமார் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படமும் நட்பை மையப்படுத்தியே உருவாக இருக்கிறதாம். ஒருவேளை அது `நாடோடிகள்’ படத்தில் இரண்டாவது பாகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது எழுத்திருக்கிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,