ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறத் தடை

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் துணை சட்டமா அதிபர் சீயா பாரூகியினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாலிய விக்ரமசூரியவின் சட்டத்தரணி சஞ்சய வீரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஜாலியவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,