பரம்பரை சொத்தை திருடும் தருஷி!

நட்பா, காதலா என்ற கருவை மையமாக வைத்து உருவாகும் படம் ‘டீக்கடை பெஞ்ச். இதுபற்றி இயக்குனர் ராம்ஷேவா கூறும்போது,’ஹீரோ ராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை காதலியான நாயகி தருஷி யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்கிறார். இதையறிந்த நாயகன், தருஷியிடம் கேட்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் சக நண்பர்கள் ராமகிருஷ்ணனை விரோதியாக பார்க்கின்றனர். காதலுக்கும், நட்புக்குமான இப்போராட்டம் நகைச்சுவையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. வி.ஜே.ரெட்டி, எஸ்.செந்தில்குமார், என்.செந்தில்குமார் தயாரிப்பு.

வெங்கடேஸ்வரராவ் ஒளிப்பதிவு. வி.சாய் தேவ் இசை. டிபி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, சித்ரா லட்சுமணன், ராஜ உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,