இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன்!

அம்பேத்கர், காமராஜர் வாழ்க்கை சரித்திர படங்கள் ஏற்கனவே உருவாகி திரைக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை படம் தமிழில் உருவாகிறது. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்று இன்று வரை சரித்திரத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் மறைந்த இந்திரா காந்தி. அவரது வாழ்க்கை சரித்திரம் திரைப் படமாக உள்ளது. அதற்கான உரிமையை நடிகை வித்யாபாலன் வாங்கியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’சாகரிகா கோஷ் எழுதிய “இந்திரா” வாழ்க்கை சரித்திர புத்தக உரிமையை திரைப்படமாக்க நான் வாங்கியிருக்கிறேன். இந்திரா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இது திரைப்படமாக உருவாகப்போகிறதா? வெப் சீரியலாக உருவாகுமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அதுபற்றி முடிவு செய்ய இன்னும் சில காலம் ஆகும்’ என்றார் வித்யாபாலன்.

எழுத்தாளர் சாகரிகா தனது ஃபேஸ்புக்கில் இதுபற்றி கூறும்ேபாது,’இந்திரா வாழ்க்கை சரித்திர புத்தகம் திரைப்படமாகிறது என்பது மிக சந்தோஷம். நீண்ட நாட்களாகவே இந்தியாவின் பவர்புல் பிரதம மந்திரி இந்திராவை திரையில் காணவேண்டும் என்று எனக்கு ஆசை. வித்யாபாலன், ராய் கபூர் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் ஆனது. இந்திரா வாழ்க்கையை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,