அரசியலமைப்புச் சபைக்கு சித்தார்த்தனின் பெயரை கூட்டமைப்பு பரிந்துரை!

அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடிய வேளையில், அரசியலமைப்புச் சபைக்கான பிரநிதித்துவத்தினை பெற்றுக்கொள்வது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றக்குழு கூட்டமொன்று புதன்கிழழை நடைபெற்றது. இதன்போது, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெறுவதற்கு தற்போது ஏற்பட்டுள்ள களச்சூழல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவதென்றும், இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு மீளப்பெறப்பட முடியாத வகையில் நிரந்தரமான, நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக அடுத்தகட்ட நடவடிக்கைளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் கூட்டத்தின்போதே, சம்பந்தன், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் இன்று நடைபெறுகின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடான கூட்டத்தில் பங்கேற்றுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!