நீண்ட நேர ஸ்மார்ட்போன் பயன்பாடு: தற்கொலை உணர்வை தூண்டலாம் – ஆய்வில் தகவல்

ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் இளைஞர்களுக்கு தற்கொலை உணர்வு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட நேர ஸ்மார்ட்போன் பயன்பாடு: தற்கொலை உணர்வை தூண்டலாம் – ஆய்வில் தகவல்
புதுடெல்லி:

ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளையோருக்கு மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட அதிக வாயப்புகள் இருப்பதாக சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மன சோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட ஸ்கிரீன் உபயோகிக்கும் நேரம் மன சோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிக நேரம் ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கம், மன சோர்வு அதிகரிக்கவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் முக்கிய காரணங்களாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஃபுளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தின் தாமஸ் ஜாய்னர் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான மன நோய்களும் மிகவும் ஆபத்தானவை. இந்த விஷத்தில் பெற்றோர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாள் ஒன்றிற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாதனங்ளை பயன்படுத்துபவர்களில் 48 சதவிகிதத்தினர், தற்கொலை சார்ந்த பழக்கவழக்கங்களை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். குறைந்த நேரம் மின்சதானம் பயன்படுத்துவோரில் 28 சதவிகிதத்தினர் மட்டுமே இதுபோன் எண்ணம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மனநல மருத்துவ அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், நீண்ட நேரம் மின்சாதனங்களை பயன்படுத்துவோர் மகிழ்ச்சியாக இல்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. மின்சாதனங்கள் அல்லாமல், விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றவர்களுடன் பேசுவதி, வீட்டுப்பாடங்களை செய்வது உள்ளிட்டறவற்றை மேற்கொண்டவர்கள் அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு மன சோர்வு மற்றும் தற்கொலை சார்ந்த எண்ணங்கள் 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பா பெண்களுக்கு இந்த எண்ணம் ஏற்படுவதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடிற்கான அமெரிக்க அமைங்கள் தெரிவித்துள்ளன.

நீண்ட நேரம் மின்சாதனம் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம் என இந்த ஆய்வில் மிகத்தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. 2010 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலை சார்ந்த எண்ணம் 31 சதவிகித வரை அதிகரித்ததாகவும், மன சோர்வு மற்றும் தற்கொலை சார்ந்த எண்ணங்கள் 33 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது தேசிய அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் இதுபோன்ற எண்ணம் பருவ வயதுடைய பெண்கள் மத்தியில் அதிகளவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை கொள்வோர் எண்ணிக்கை 65 சதவிகிதமாக இருக்கும் நிலையில், உயர் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வோர் எண்ணிக்கை 58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,