யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு! – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்கள் ஆனைக்கோட்டை வராகி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியிலும், கொக்குவில் பூநாரிமடத்தை அண்மித்த பகுதியிலும் நடந்துள்ளன.

முகத்தைக் கறுப்புத் துணிகளால் மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே வாள்வெட்டில் ஈடுபட்டனர் . அந்தப் பகுதியில் வான், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை அந்தக் கும்பல் தாக்கியது. அதில் இருவர் காயமடைந்தனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: