கார்த்தி நடிக்கும் சிங்கம்!

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் சூப்பர் ஹிட்டானது போல், கார்த்தி நடிப்பில் உருவாகும் படத்திற்கு சிங்கம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். `தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருக்கிறார். போஸ்டரில் ‘பயிர் செய்ய விரும்பு’, ‘விவசாயி’ போன்ற வாசகங்களை காணமுடிந்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் ‘சிங்கம்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ச்சியாக ‘சிங்கம் 2’ , ‘சிங்கம் 3’ ஆகிய படங்களும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது கார்த்தி நடிக்கும் படத்திற்கு சிங்கம் தலைப்பு வைத்திருப்பது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,