இதய நோய் வராமல் பாதுகாக்க வாரம் 5 நாட்கள் உடற்பயிற்சி அவசியம்

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.

எடையைக் கட்டுப்படுத்தலாம் வலிமையையும், திண்மையையும் பெறலாம். மூட்டுக்களிலும், தசைகளிலும் இளக்கம் பெறலாம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம் மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்துவதுடன் மூப்படையும்போது வலிமையைப் பேணலாம். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் 30 வயதில் வரும் சர்க்கரை நோய் மற்றும் இதயநோயைக் கட்டுப்படுத்தலாம். அதே போல் யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். ஒவ்வொருவர் உடலுக்குத் தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்குத் தகுந்தபடியே உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே.

அதேபோல் ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சிக் கருவிகள், தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கும்படி பார்த்து சேர்ந்து பயிற்சி பெறவேண்டும்.

அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. செய்துவிட்டு, நாளுக்குநாள் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணிநேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

குறிப்பாக, இதயநோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கு இத்தகைய உடற்பயிற்சிகள் உதவுகின்றன. தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியில் ஈடுபடும்போது இதயத்தமனி நோய்களையும், மாரடைப்புகளையும் கணிசமான அளவில் தடுக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,