ஜனாதிபதி வேட்பாளருக்கு இவரே பொருத்தமானவர் ; கோத்தாவை பரிந்துரைக்கவில்லை – திஸ்ஸவிதாரண

ஜனாதிபதி வேட்பாளருக்குக்கு பொருத்தமானவர் தினேஷ் குணவர்தன என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை ஒன்றுமையாகவும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஆட்சிசெய்யக் கூடிய தலைவரே நாட்டிற்கு முக்கியம். அதேவேளை நாட்டை எந்தவேளையிலும் பிளவு படுத்தாது ஆட்சி செய்யக் கூடியவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க எண்ணியுள்ளோம்.

நாம் ஜனாதிபதி வேட்பாளராக தினேஷ் குணவர்தனவையே முன்னிறுத்த எண்ணியுள்ளோம். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரிகள் எவ்வாறான நிலைப்பாட்டிலுள்ளனரோ தெரியவில்லை.

தினேஷ் குணவர்தனவுக்கு இன, மதம் கடந்து நாட்டை ஒன்றிணைத்து ஆட்சிசெய்யக்கூடிய தகுதியுள்ளது.

நாம் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எண்ணியுள்ள தினேஷ் குணவர்தனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிறுத்தி போட்டியிட வைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கினால் மாத்திரமே முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!