காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது: – உச்ச நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு

காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர்கொண்ட அமர்வு, வடமாநிலங்களில் அதிகரித்துவரும் கட்டப்பஞ்சாயத்துகள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்தன.

’இருவேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். ஒரு ஆணும் , ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளலாம். திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்டவிரோதம். சாதி மறந்து காதல் திருமணம் செய்வதைத் தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சமூகம் என யாருக்கும் கிடையாது’ என்று நீதிபதிகள் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,