“குழந்தைகளுக்கு இப்படித்தான் பெயர் வைக்கவேண்டும்” – கிம் ஜாங் அதிரடி உத்தரவு!

வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு மென்மையான பெயர்களை வைப்பதற்கு பதிலாக இனி “வெடிகுண்டு” “துப்பாக்கி” போன்ற தேசபக்தி பெயர்களை வைக்குமாறு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அணு சக்தி சோதனை மற்றும் ஏராளமான ஏவுகணை பரிசோதனை ஆகியவற்றை நடத்தி உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
    
இந்நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தற்போதைய புதிய உத்தரவால் சொந்த நாட்டு மக்களே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கிம் ஜாங் உன்னின் புதிய உத்தரவில் வட கொரிய குழந்தைகளுக்கு மென்மையான பெயர்களை வைப்பதற்கு பதிலாக புதிய முறையில் சோங் இல் (துப்பாக்கி), சுங் சிம் (விசுவாசம்), போக் இல் (வெடிகுண்டு) மற்றும் உய் சாங் (செயற்கைக்கோள்) போன்ற தேசபக்தி அதிகம் கொண்ட பெயர்களை வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெர்மிட் இராச்சியத்தின் எ ரி (நேசிப்பவர்) சோ ரா (சங்கு ஷெல்) மற்றும் சு மி (சூப்பர் பியூட்டி) போன்ற மென்மையான பெயர்கள் வைக்கும் போக்கை வட கொரியா உடனடியாக நிறுத்துமாறு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரிய அரசின் இந்த புதிய உத்தரவின் அடிப்படையில் மக்கள் அனைவரும் இந்த வருடத்தின் இறுதிக்குள் தங்கள் பெயர்களை “புரட்சிகரமாக” மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அபராதம் அல்லது மோசமான நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு ஹம்கியோங்கின் வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வட கொரிய குடிமகன் ஒருவர் ரேடியோ ஃப்ரீ ஏசியா-விடம் தெரிவித்த கருத்தில், அரசுக்குத் தேவையான தரத்திற்கு ஏற்ப தங்கள் பெயர்களை மாற்ற அதிகாரிகள் மக்களை கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தொடங்கி, அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் அனைத்து பெயர்களையும் திருத்துவதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. இதற்கிடையில் மற்றொரு நபர் நாம் உண்மையில் இயந்திர பாகங்களா அல்லது கால்நடைகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பட்டினி மற்றும் அடக்குமுறையின் தற்போதைய சகாப்தத்தை பிரதிபலிக்கும் பெயர்களை வைக்கலாமா என்று தங்கள் கோபத்தை வெளிகாட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!