21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம் – வெள்ளியன்று இலங்கையில் காணலாம்!

930083724
21ஆம் நூற்றாண்டின் நீண்ட- முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார்.

பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஏற்பட்ட மத்திய சந்திர கிரகணத்தின் பின்னர் ஏற்படும் நீண்ட முழு சந்திர கிரகணமாக இது அமைந்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படும் ‘இரத்த நிலவு’ சந்திர கிரகணமானது ஒரு மணித்தியாலமும் 43 நிமிடங்களும் நீடிக்கவுள்ளது. ஆரம்பம் முதல் முடிவுவரை சுமார் 4 மணித்தியாலங்கள் வானத்தில் வித்தியாசமான நிகழ்வுகளை காண முடியும்.

சந்திர கிரகணம் இடம்பெறும் அதேநேரம், செவ்வாய் கிரகம் நேர் எதிராகச் செல்லும்போது அதன் பிரகாசம் தெரியவுள்ளது. இதனால் சிவப்பு நிறம் பூமிக்கு மிகவும் அருகில் தெரியும். அது மாத்திரமன்றி இரவு முழுவதும் சந்திரன் மிகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

நடுத்தர அளவு தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி சந்திரனை நோக்கினால் சிவப்பு நிற பள்ளங்களை பார்க்க முடியும் என இலங்கை கோள் மண்டலம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகும். மறுநாள் 28ஆம் திகதி அதிகாலை 4.58 மணிவரை பூமியின் நிழல் சந்திரனில் காணப்படும்.

வெற்றுக்கண்ணால் பார்க்க விரும்புபவர்கள் இரவு 11.45 மணிக்கு பூமியின் நிழல் சந்திரணை மறைப்பதைப் பார்க்க முடியும். முழுமையான சந்திரகிரகணம் 28ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு தென்படும். அதிகாலை 1.51 பூரணமான சந்திரகிரகணம் தெரியும் என பேராசிரியர் ஜயரட்ன தெரிவித்தார்.

100 வருடங்களின் பின்னர் தோன்றும் நீண்ட முழு சிவப்பு சந்திரனாகவும் இது அமையவுள்ளது. சாதாரண சந்திரனைவிட 40 மடங்கு பெரியதாகவும் இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!