நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 7.6 வீதமாக உயர்வடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அந்நிய செலாவணி கையிருப்பு 1610 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதாகவும், தற்போது 1732 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கச் சொத்துக்கள் 5.8 வீதமாக நவம்பர் மாதம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் 1705 மில்லியன் டொலர்களாக காணப்பட்ட உத்தியோகபூர்வ ஒதுக்கச் சொத்துக்கள் 1804 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!