ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – 38 எம்.பிக்கள் கைச்சாத்து!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பது தொடர்பான பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றில் பிரதமர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டதனை அடிப்படையாகக் கொண்டும் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட உள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , , ,