குளம் உடைப்பெடுப்பு : பலர் மாயம் : பலர் பலி!!!

ஆசிய நாடான லாவோஸின் அட்டாபு மாகாணத்திலுள்ள குளம் நேற்று உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதாகவும் பலர் பலியாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளது.

குறித்த குளம் உடைப்பெடுத்ததில் 6 கிராமங்களின் ஊடாக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், வௌ்ளம் காரணமாக 6,600க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆனால் குளம் உடைப்பெடுத்ததற்கான காரணம் எதுவும் வௌியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!