கழிப்பறை சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளர் செய்த வேலை

சீனாவில் உள்ள கழிப்பறைகள் மிகவும் சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளரொருவர் சிறுநீர் கழித்த கழிப்பறையில் உணவினையிட்டு அதை எடுத்து உண்ணும் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.

சீனாவில் ஜெங்ஜோ என்ற இடத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிறுவனமானது தேயிலை விநியோகம் செய்யும் நிறுவனம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தம் நாட்டில் கழிப்பறைகள் மிகவும் தூய்மையானது என நிரூபிக்கவே குறித்த மேற்பார்வையாளர் மற்றும் இரு பெண்கள் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!