காதலை வெறுக்கும் விமல்!

மன்னர் வகையறா’ படத்தையடுத்து விமல் நடிக்கும் படம் ‘கன்னிராசி’. வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். அவர் கூறும்போது,’ஒரே குடும்பத்தில் அத்தனை பேரும் கன்னிராசியில் பிறக்கின்றனர். அவர்களுக்கு காதல் திருமணம் நடக்கிறது. கடைக்குட்டி விமல் மட்டும் காதலை வெறுக்கிறார். அப்போது எதிர்வீட்டுக்கு வரலட்சுமி குடிவருகிறார். இருவரும் சந்திக்கும்போது நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாக அமைகிறது.

இருவரும் காதலர்கள் ஆகிறார்களா என்பது கிளைமாக்ஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் கொலு பண்டிகை பாடல் இடம்பெறுகிறது. இதற்காக 2 ஆயிரம் பொம்மைகள் வாங்கப்பட்டது. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கிறார். பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு. விஷால் சந்திரசேகர் இசை’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: