தனது உள்ளாடையை பறக்கும் விமானத்தில் காயவைத்த பெண் பயணி!

பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் தனது உள்ளாடையை காயவைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. துருக்கியில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு Ural விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதில் பயணம் செய்த பெண் ஒருவர் தமது உள்ளாடையை, தலைக்கு மேலிருக்கும் சிறு துளை வழியாக வெளிவரும் காற்றில் காயவைத்த்துள்ளார்.

சுமார் 20 நிமிடங்கள் அவர் தமது உள்ளாடையை அந்த துளையின் அருகாமையில் வைத்து காயவைத்துள்ளார்.உள்ளாடையை இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் காயவைக்கிறோம் என்ற எண்ணமே அவரிடம் இருக்கவில்லை என எஞ்சிய பயணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தை பயணி ஒருவர் தமது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

பலர் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து சொல்லவும் மறுத்துள்ள நிலையில், சிலர், குறித்த பெண்மணி ஒரு தாயாராக இருக்கலாம், அவசரத்தில் விமான பயணம் மேற்கொண்டதால் தமது குழந்தையின் உள்ளாடையை அவ்வாறு காயவைத்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் குறித்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பெண்மணி ஒருவர், இச்செயல் நாயின் ஒத்த குணம் என்றார். மட்டுமின்றி துருக்கியின் பாதி குடிமக்களும் இதே குணத்துடனே உள்ளனர் எனவும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: ,