கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து பிரதமர் ட்ரூடோஅதிருப்தி!

உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சில சில கனேடியர்களின் கணக்குகள் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்வதற்கு google நிறுவனம் சில வரையறைகளை அமுல்படுத்தி வருகின்றது.
    
இந்த நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார். google நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவை சேர்ந்த 4 வீதமானவர்களின் கணக்குகள் ஊடாக ஆன்லைன் செய்திகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையிலான லிபரல் அரசாங்கம் ஆன்லைன் நியூஸ் சட்டம் ஒன்றை அறிமுகம் செய்கின்றது.

இந்த சட்டம் தொடர்பிலான பதிலளிப்பாக கூகுள் நிறுவனம் இந்த செய்தி கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதனை தவிர்த்து கனடியர்கள் செய்திகளை பெற்றுக் கொள்வதனை முடக்குவது ஆச்சரியம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!