‘ எனக்கு ஜனாதிபதி எந்த குறையும் சொல்லவில்லை’ – அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதி தனக்கு குறை கூறியதாக பத்திரிக்கையில் வந்த செய்தி பொய்யானது மற்றும் அது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று வெளிவேரிய கிரிக்கித்த ஸ்ரீ பமுனு பௌத்த மத்தியஸ்தானத்தில் இடம்பெற்ற பௌர்ணமி விசேட சமய நிகழ்வின் பின்பு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ நான் அமைச்சரவையில் இடம்பெறுகின்றவற்றை வெளியில் சொல்பவன் அல்ல. ஆனால் இதை நான் சொல்ல வேண்டும். அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி என் மீது குறை கூறவில்லை என்று.

ஆனால் அப்படி ஒரு செய்தியை ஊழல் வாதிகளுடன் தொடர்புடைய பத்திரிக்கையிலேயே வெளியானது. இந்த செய்தியானது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எமது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

நான் ஒருபோதும் நினைக்கமாட்டேன் ஜனாதிபதி அப்படியொரு வார்த்தையை தெரிவித்திருப்பார் என்று. அது ஒரு போலியான செய்தி. மக்கள் செல்வாக்கற்ற அரசியல் பலமற்றவர்களே இந்த மாதிரியான செய்திகளை வெளியிடுவார்கள். அவா்கள் பின்கதவால் பதவிக்கு வர நினைக்கின்றனர். அவர்கள் ஊழலின் மூலம் கருப்பு பணத்தை சம்பாதித்தவர்கள். அதனால் தான் கடந்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது’ என்றார் அமைச்சர்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘நான் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் சில பொருத்தமற்ற விடயங்களை இனங்கண்டேன். நான் அவரைப் போல பெரிய அளவில் சட்டத்தை பயின்றவன் அல்ல. எனக்கு விளையாட்டு தொடர்பான சட்டங்கள் பற்றிய அறிவு உண்டு.

ஆகவே தான் நான் முயற்ச்சி செய்தேன் சில குறிப்பிட்ட விடயங்களை தெளிவுபடுத்த. ஆனால் விளையாட்டத்துறை அமைச்சர் அதனைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. காரணம் சில ரேஸ்புகி வைத்திருப்பவர்களின் மறைமுக அலுத்தம் காரணமாக’ என்றார்.

இதன் போது ஊடகவியளார்கள் பல வினாக்களை தொடுத்தனர்.

வினா: ஊடகச் செய்தியில் விளையாட்டுச் சட்டம் இலக்கம் 44 கீழ் கிரிக்கெட் நிர்வாக சபையின் நியமனங்கள் இடம்பெற்றதாக உள்ளது. ஆனால் விளையாட்டுச் சட்டத்தில் அப்படி ஒரு பிரிவு இல்லை எனப்படுகின்றதே?

அமைச்சரின் பதில்: ஆம், அது பற்றிதான் நான் விளங்கப்படுத்த முயற்ச்சித்தேன். ஆனால் நான் ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கு சட்டம் பற்றி கற்பிக்க முடியாது. பிரிவு 44 உள்ளது. அதை நாங்கள் கண்டுபிடித்தாகவேண்டும்.

வினா: அதாவது சட்டத்தரணியான பைசர் முஸ்தபா பிழை செய்து விட்டாரா அல்லது அது பற்றி அரியாமல் உள்ளாரா?

அமைச்சரின் பதில் : அவர் சில வேளைகளில் சூதாட்ட காரர்களிடமிருந்து சட்டப்பிரிவை எடுத்திருக்கலாம். உண்மையில், கடந்த அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் மகிந்தாநந்த அலுத் கமகே கிரிக்கெட்டில் நிர்வாகத்தில் ஊழல் வாதிகளுக்கும் சூதாட்ட காரர்களுக்கும் இடம்கொடுக்கவில்லை. நான் உண்மையில் பாராட்டுகின்றேன் அவரது செயலுக்கு. தற்போது கிரிக்கெட் கீழ் நிலைக்கு போக காரணம் பின்கதவினால் வந்த ஊழல் வாதிகளாலே.

வினா: மற்றவர்கள் நினைத்தவாறு விளையாட்டுச் சட்டத்தை மாற்ற முடியுமா?

அமைச்சரின் பதில்: ஆம் நான் நினைக்கின்றேன். நான் இன்னும் தேடுகின்றேன் எங்கே அந்த பிரிவு 44 எங்கே என்று. விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களாளே கூட கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

வினா: அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் உள்ளுராட்சி தேர்தல் திருத்தச்சட்டத்தை மாற்றி அமைப்பதில் தவறு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதுபோல தற்போது கிரிக்கெட்டில் இடம்பெறுமா?

அமைச்சரின் பதில்: அது பற்றி பொறுத்திருந்து பார்க்கவேண்டும். என்னால் எதையும் செய்ய முடியாது. நான் விடுக்கும் வேண்டுகோளானது அமைச்சர் முஸ்தபா பிரிவு 44 எனக்கு காட்டவேண்டும் என்பதேயாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!