அதிகாலையில் காணும் கனவு குறித்து நீங்கள் அறியாத மர்மங்கள்..!இதை படிங்க…

அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்கிறது சாஸ்திரம்.
நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம்.கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது.அன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும்.அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.

உங்கள் கனவு..நல்ல கனவா..? கெட்ட கனவா..? தெரிந்துகொள்ள…!!!?
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும், நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு1 வருடத்திலும்,
இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3 மாதத்திலும்,
இரவு10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,
விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிக்கும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரங்கள்’ கூறுகின்றன.பகல் கனவு காண்பவர்களும் உண்டு. ஆனால், பகலில் காணும் கனவுகள் பலிப்பதில்லை.

நற்பலன்தரும் கனவுகள்:
விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

ஆமை,மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும்.
கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.மயில்,வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.கழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும். வாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

தீய பலன் தரும் கனவுகள்:
பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும்.இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு, வியாதி சூழும்.முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: