காமெடி நடிகர்கள் கூடடணியில் புதிய படம்!

புதியபூமி படத்தில் எம்ஜிஆரால் கதாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி.குகநாதன். தமிழ், கன்னடம், மராத்தி, இந்தி மொழி படங்களிலும் கதை, இயக்கம் என 249 படங்களில் பணியாற்றியிருக்கிறார். அட்ராசக்கை அட்ராசக்கை, மனைவிக்கு மரியாதை போன்ற படங்களை இயக்கிய இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ‘அல்வா தின்ன ஆசையா’ படத்துக்கு கதை வசனம் எழுதுகிறார்.

இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகையுடன் வையாபுரி, யோகிபாபு, மயில்சாமி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷாம்ஸ், மனோபாலா, சேஷூ, போண்டா மணி, மதுமிதா, ரிஷா, சினேகாராஜன் என 14 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கின்றனர். சாய்சிவா இயக்குகிறார். தேவா இசை. தர்மா ஒளிப்பதிவு. கிளாமர் சினி கைடு தயாரிப்பு. சென்னை அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: