அரசியல்வாதியாக மாறிய பிரியாமணி!

காதலர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பிரியாமணி. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு அவர் நடிக்க துவங்கிய படத்தை இப்போது முடித்திருக்கிறார். இது கன்னட மொழி படம், துவாஜா. ரவி ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் பிரியாமணி. இது வில்லி வேடம். தமிழில் வெளிவந்த கொடி படத்தின் ரீமேக் இப்படம்.

திரிஷா நடித்த வேடத்தில்தான் பிரியாமணி நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் வேடத்தில் திவ்யா உருதுகா நடித்திருக்கிறார். அசோக் கஷ்யப் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இதில் பிரியாமணி கலந்துகொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: