மீண்டும் இணையும் சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி!

2012ல் ரிலீசான படம், சுந்தரபாண்டியன். தன்னிடம் சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை, இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி நடித்தார் சசிகுமார். இதையடுத்து இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், தற்போது சுந்தரபாண்டியன் 2 படத்தை இயக்க உள்ளார். இதில் சசிகுமார் நடிக்கிறார்.

இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறுகையில், ‘சமூக வலைத்தளங்களில், சுந்தரபாண்டியன் கூட்டணி மீண்டும் எப்போது இணைகிறது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும்’ என்றார். தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வரும் சசிகுமார், அசுரவதம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சுந்தரபாண்டியன் 2 தொடங்கும் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,