மீண்டும் ஊரடங்கா? – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த XBB.1.16 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் தற்போது தீவிரமான பாதிப்புகளை உயிரிழப்புகளோ எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7,927 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,30,818-ஐ எட்டியுள்ளது. இதில் கர்நாடகா மற்றும் குஜராத்தில் நேற்று தலா ஒருவர் உயிரிழந்தவர்களும் அடங்குவர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் ஊரடங்காமல் படுத்த வேண்டிய தேவை வராது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் மாநில அளவில் ஏற்படும் நோய் தாக்கத்தின் அளவுகளை குறித்து அந்தந்த அரசுகள் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!