இளமையாக காட்டி கொள்ள £100,000 பணத்தை செலவு செய்த பெண்: – இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

பிரித்தானியாவை சேர்ந்த பெண் தன்னை இளமையாக காட்டி கொள்ள இதுவரை பல அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் இனியும் சிகிச்சை செய்தால் அவர் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ussex கவுண்டியை சேர்ந்தவர் ஐமி வீனஸ் (43). இவர் பல ஆண்டுகளாகவே தன்னை இளமையாக காட்டி கொள்ள பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சையை செய்து கொண்டுள்ளார்.

மூக்கு, கண்கள், உதடுகள், வயிறு, மார்பகம் என பல்வேறு பகுதிகளை இளமையாக காட்டி கொள்ள தொடர் சிகிச்சைகளை செய்து வருகிறார். இதற்காக ஐமிக்கு இதுவரை £100,000 பணம் செலவாகியுள்ளது, சிகிச்சைக்காக இன்னும் பணம் செலவிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐமி கூறுகையில், இதற்கு மேலும் அறுவை சிகிச்சை செய்தால் எனது உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை பற்றி எனக்கு கவலையில்லை.

என்றாவது ஒருநாள் நான் இறக்க தான் போகிறேன், அந்த இறப்பு என் இளமைக்கு உதவும் அறுவை சிகிச்சை மூலமாக வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். என் 25 வயதிலிருந்து இது போன்ற சிகிச்சையை எடுத்து வருகிறேன், இறுதிவரை இப்படி தான் செய்வேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!