இஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன் சிறுமி விடுதலை

இஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்தமைக்காக சிறை பிடிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாலஸ்தீன் சிறுமி அஹித் தமீமியை இஸ்ரேல் அரசு விடுவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமீமி, தனது கிராமமான நபி சாலிபில் இஸ்ரேலிய அரசு தனது குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமீம் இஸ்ரேல் வீரரைக் கன்னத்தில் அறைந்து தாக்கியமைக்காக இஸ்ரேலிய இராணுவம் அவரை கைதுசெய்து இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.

இதன்படி இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் தமீமுக்கு 8 மாத சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவரது தாயாருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அஹித் தமீமிமும், அவரது தயாரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்ததுடன் பாலஸ்தீனும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற அஹிம் தமீமி பாலஸ்தீன் திரும்பும்போது பாலஸ்தீன் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தனது விடுதலை தொடர்பாக அவர் ஊடகங்களை சந்தித்து தெரிவிக்கும் போது, நான் சிறையிலிருந்தப்போது எனக்கு உதவியாக இருந்த பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் இருப்பினும் முழு மகிழ்ச்சி இல்லை. இன்னும் இஸ்ரேல் சிறைகளில் நம் மக்கள் இருக்கிறார்கள்.

எனது சகோதரி இல்லாமல் எனது மகிழ்ச்சி நிறைவடையாது அவள் விரைவில் விடுதலை செய்யப்படுவாள் என்று நம்புகிறேன். மக்களிடம் தான் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள். பாலஸ்தீன போராட்டடத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. அது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!