இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் சட்ட நடவடிக்கை

யாழில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் இராணுவத்துக்கு தொடர்பு இருப்பின் அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் மேற்கண்ட குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்த அவர், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!