விடுதலைப்புலிகளின் கொள்கை இன்னமும் உயிர் வாழ்கின்றது- மலேசியாவின் முன்னாள் அதிகாரி

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவர்களது கொள்கை தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் டன் சிறி முசா ஹசன் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவர்களது கொள்கை தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றது அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பலர் உலகின் பல பகுதிகளில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மலேசியா உட்பட எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் சேர்த்துள்ளன மேலும் 32 நாடுகள் அந்த அமைப்பை தடைசெய்துள்ளன இதன் காரணமாக அந்த அமைப்பினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை இலகுவாக கருதக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!