கொழும்பு வந்தார் கொமன்வெல்த் பொதுச்செயலர் – ரணிலுடன் சந்திப்பு

கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்தார்.

இதையடுத்து அவர், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவையும் அவர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அதேவேளை, நாளையும் நாளை மறுநாளும், அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, பைசர் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, அகில விராஜ் காரியவசம், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் பற்றீசியா ஸ்கொட்லன்ட் சந்தித்துப் பேசவுள்ளார்.

2016 ஏப்ரலில் கொமன்வெல்த் பொதுச்செயலராகப் பதவியேற்ற பின்னர் பற்றீசியா ஸ்கொட்லன்ட் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!