முதலமைச்சரின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?

பொலிஸ் அதிகாரத்தை எங்களிடம் தாருங் கள் இரண்டு மாத காலத்துக்குள் நாங்கள் வடக்கில் நடக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட சம்ப வங்களை அடக்கிக் காட்டுகிறோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்கள் சவால் விட்டுள்ளார்.

இங்குதான் வடக்கு முதலமைச்சரின் ஆணித் தரமான நிலைப்பாடு வெளிப்படுகிறது.

அதாவது வடபுலத்தில் தற்போது வாள்வெட்டு உட்பட கொள்ளை, போதைவஸ்து, கடத்தல் சம்பவங்கள் நடந்த வண்ணமுள்ளன.

இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். எனினும் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் இன் னமும் பொலிஸார் வெற்றி பெறவில்லை.

வட மாகாணம் முழுவதிலும் பொலிஸ் நிலை யங்களும் இராணுவ முகாம்களும் இருக்கின் சூழ்நிலையில் வாள்வெட்டுக் குழுக் களின் அட்டகாசம் நீடிக்கிறது எனும்போது இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பதாக வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை அரசி டம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அந்தக் கோரிக்கை பொலிஸ் அதிகாரத்தை எங்களிடம் தாருங்கள் வட பகுதியில் நடக்கும் அத்தனை குழப்பங்களையும் அடாவடித் தனங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நாங்கள் நிறுத்திக் காட்டுகிறோம் என்பதுதான்.

இங்குதான் முதலமைச்சரின் கோரிக்கை இருவகைச் சிக்கலை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அதாவது முதலமைச்சர் கேட்டதன்படி பொலிஸ் அதிகாரத்தை வடக்கு மாகாண சபைக்குக் கொடுப்பது என்பது ஒரு விடயம்.

இதைச் செய்யவில்லை என்றால் வடக்கில் நடக்கும் வாள்வெட்டுச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

இதில் இலங்கை அரசு ஏதோவொன்றைச் செய்தால்தான் அது முதலமைச்சரின் கோரிக்கைக்குப் பதிலளிப்பதாக இருக்கும்.

அதேநேரம் வாள்வெட்டுக் குழுக்களை பொலிஸார் உடனடியாகக் கட்டுப்படுத்தினால் இதனை இப்போது எவ்வாறு செய்ய முடிந்தது.

முதலமைச்சர் கேட்டவுடன் வாள்வெட்டுச் சம்பவங்களை உடனடியாக நிறுத்த முடியுமென் றால், இதனை ஏலவே செய்ய முடியாமல் போனது ஏன்? என்ற கேள்வி எழும்.

இங்குதான் இலங்கை அரசுக்கும் பொலிஸாருக்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.

எதுஎவ்வாறாயினும் முதலமைச்சரின் கோரிக் கைக்கு இணங்கி அரசாங்கம் பொலிஸ் அதி காரத்தை எங்களுக்குத் தரப் போவதில்லை என்பது சமகால நிலைப்பாடு.

அதேநேரம் பொலிஸ் அதிகாரத்தை எங்களிடம் தந்தால் சொல்லி இரண்டு மாதங்களுக்குள் அத்தனை அடாவடித்தனங்களையும் நிறுத்திக் காட்டுவோம் என்று வடக்கின் முதலமைச்சர் பகிரங்கமாக கூறியுள்ளார் எனும்போது, அது வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணி என்ன என்பதையும் அதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதன் மாயம் என்ன என்பதனையும் சர்வதேசம் நிச்சயம் புரிந்து கொள்ளும்.

இங்குதான் முதலமைச்சரின் கோரிக்கை எப்படியும் உண்மை நிலையை வெளிப்படுத்து வதாக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!