இன்றைய ராசி பலன்கள் 19.12.2014

astrology16மேஷம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவா தங்கள் வந்து போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதி காரிகள் ஆதரிப்பார்கள். மாலை 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: சவாலான விஷயங் களிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை குறையும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். கனவு நனவாகும் நாள்.

கடகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். புது வேலை அமையும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிட்டும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: மாலை 3.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். மாலைப் பொழுதி லிருந்து தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். சொந்த- பந்தங் களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக் கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். சிறப்பான நாள்.

மகரம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். சகோதரர்கள் உங்கள் வளர்ச் சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.

கும்பம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சாதித்துக் காட்டும் நாள்.

மீனம்: மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தன்னம்பிக்கை குறையும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

Tags: