அரச மருத்துவ அதிகாரிகளின் போரட்டத்துக்கு அரசாங்கமே பொறுப்பு – பந்துல

அரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வைத்தியர்களின் வேதன உயர்வு மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளன. இவை தொடர்பாக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி அரசாங்கம் தனது அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் தேவையை நிறைவேற்றும் நோக்கம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கத்தின் அடிப்படையிலேயே அரசாங்கமும் செயற்படுகின்றது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை வருடங்கள் நிறைவடைந்தும் எதனையும் செய்யமுடியாத அரசாங்கம் எஞ்சியிருக்கும் குறுகிய காலத்தில் மக்களைக் கொன்றேனும் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே எதிர்பார்க்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!