பொருளாதார வளர்ச்சி 4 வீதத்தைத் தாண்டாது – மத்திய வங்கியின் கணிப்பு பிசகியது

2018ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4 வீதத்துக்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார்.

பாதீட்டு இடைவெளி அதிகமாகவே இருப்பதால், 2018ஆம் ஆண்டின் வளர்ச்சியை, 4 வீதத்துக்கும் மேல் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறிலங்கா மத்திய வங்கி, இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி, 4 தொடக்கம் 4.5 வீதத்துக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்று கணிப்பிட்டிருந்தது.

2017ஆம் ஆண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக குறைந்திருந்தது. இது கடந்த 16 ஆண்டுகளில் மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!