தி.மு.கவை கைவிடுகின்றதா காங்கிரஸ்?

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவை ஒதுக்கிவைத்து விட்டு சிறுகட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயல்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ்கட்சி காரணமாகவே தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது என திமுகவின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை காங்கிரஸ் மேலிடத்தை சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுகவிற்கு குறைந்தளவு இடங்களை ஒதுக்க கூடும் அல்லது சிறிய கட்சிகளை இணைத்து தமிழகத்தில் கூட்டணி அமைக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியை ராகுல்காந்தி ஆரம்பித்துள்ளார் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.

இதற்கான பொறுப்பை அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்துள்ளார். அவர் கமலஹாசனின் கட்சி உட்பட பல சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

காங்கிரசுடன் கூட்டுசேர தயார் என டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதற்கும் இதுவே காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!