தந்தையை குத்திக்கொன்ற 3 சகோதரிகளுக்கு விளக்கமறியல்

ரஷியாவின் – மொஸ்கோ நகரில் படிக்கவிடாமல் வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 3 சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷியாவின் மொஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயதான நபரே கடந்த மாதம் 27ஆம் திகதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று மகள்களையும் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

படிக்கவிடாமல் என்நேரமும் வீட்டு வேலை செய்ய கூறி தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், ஆயுதங்களால் தாக்கியதாகவும் 3 சகோதரிகள் தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தனர். செப்டெம்பர் 28 வரை மூன்று சகோதரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!