இந்தோனேசிய பூகம்பத்தில் 80 பேர் பலி-

இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுகளை தாக்கிய பூகம்பம் காரணமாக 80 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளர் வீடுகள் பல முற்றாக அழிந்து போயுள்ளன இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பூகம்பத்தை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகள் காரணமாகவே பெருமளவு மக்கள் பலியாகியுள்ளனர்.

லம்பக்கின் முக்கிய நகரான மட்டராமில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய அதிர்வுகள் காரணமாக தாங்கள் வீட்டை விட்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.

அனைவரும் பதட்;டமடைந்தோம் அனைவரும் வீட்டை விட்டு ஓடினோம் என இனான் என்பவர் தெரிவித்துள்ளார்;

மட்டரம் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.

இதேவேளை முக்கிய மருத்துவமனைகளில் காணப்பட்ட நோயாளிகள் பூகம்பத்தின் பின்னர் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் சிறிய அதிர்வுகள் காணப்பட்டன பின்னர் அவை பலத்த அதிர்வுகளாக மாறின மக்க்ள அதனை உணர்ந்து பூகம்பம் என அலறியபடி வீதிக்கு வந்தனர் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

லொம்பேர்க் மற்றும் பாலி நகரங்களில் இடிபாடுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!