நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு

திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

திருகோணமலை சம்பூர் பாட்டாளிபுத்தை அண்டிய பகுதியில் 33 வயதான குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற ஆசிரியை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந் நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் முதலாவது சந்தேக நபரான பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது 38) மற்றும் விஜயகுலசிங்கம் சந்திரபாலன் (வயது 28) ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களான கிருஷ்ணபாலன் ரஜீவ் காந்தன் (வயது 32) மற்றும் சிவகுமார் சிவரூபான் (வயது 27) ஆகியோர் மீதன குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினால் நீதிவான் அவர்களை விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!