விக்கினேஸ்வரன் உட்பட இரு அமைச்சர்களை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!