ஈரானுடன் உறவைப் பேணும் எவரும் எம்முடன் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது – ட்ரம்ப்

ஈரா­னுடன் வர்த்­தக நட­வ­டிக்­­கையில் ஈடு­படும் எவரும் அமெ­ரிக்­கா­வுடன் வர்த்­தகம் எத­னையும் மேற்­கொள்ள முடி­யாதென அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

ஈரா­னுக்கு எதி­ரான புதிய தடைகள் அமு­லுக்கு கொண்டு வரப்­பட்­டதைத் தொடர்ந்தே அவர் மேற்­படி எச்­ச­ரிக்­கையை டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் வெளி­யி­டப்­பட்ட செய்­தியின் மூலம் விடுத்­துள்ளார்.

ஈரா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவால் விதிக்­கப்­பட்­டுள்ள சில தடைகள் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இரவு முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், எண்ணெய் ஏற்­று­ம­தி­க­ளுடன் தொடர்­பு­டைய கடு­மை­யான தடைகள் எதிர்­வரும் நவம்பர் மாதம் முதல் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன.

இந்தத் தடைகள் உள­வியல் ரீதி­யான போரா­க­வுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்ள ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி, இது ஈரா­னி­யர்கள் மத்­தியில் பிரி­வி­னையை விதைப்­ப­தா­க­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இந்­நி­லையில் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இந்தத் தடைகள் குறித்துக் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. நியா­யஸ்தம் செய்­யக்­கூ­டிய வர்த்­த­கத்தை மேற்­கொள்ளும் நிறு­வ­னங்­களைப் பாது­காக்கப் போவ­தாக அது சூளு­ரைத்­துள்­ளது.

ஈரா­னு­ட­னான அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா இந்த வருட ஆரம்­பத்தில் வாபஸ் பெற்­றதைத் தொடர்ந்து அந்­நாட்­டுக்கு எதி­ரான மேற்­படி தடைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அந்த அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யா­னது ஈரான் தனது சர்ச்­சைக்­கு­ரிய அணு­சக்தி செயற்­பா­டு­களை வரை­யறை செய்­வ­தற்கு பதி­லீ­டாக அந்­நாட்­டுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டுள்ள தடை­களை நீக்­கு­வதை இலக்­காகக் கொண்­டுள்­ளது.

அந்த உடன்­ப­டிக்கை ஒரு­தலைப்பட்­ச­மா­ன­தா­க­வுள்­ள­துடன் மோச­மான ஒன்­றென டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் ஈரா­னுக்கு எதி­ராக பிர­யோ­கிக்­கப்­படும் புதிய பொரு­ளா­தார அழுத்தம் மூலம் அந்­நாட்டை புதிய உடன்­ப­டிக்­கை­யொன்­றுக்கு இணங்க வைக்க முடியும் என நம்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஈரா­னுடன் தொடர்ந்து வர்த்­த­கத்தை மேற்­கொள்ளும் கம்­ப­னி­களைக் கவ­ச­மா­க­வி­ருந்து பாது­காக்­க­வுள்­ள­தாக ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­வித்­துள்ள நிலையில், ஈரா­னு­ட­னான வர்த்­தகப் பங்­கா­ளி­க­ளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

ஈரா­னுக்கு எதி­ராக இது­வரை விதிக்­கப்­பட்­ட­தி­லேயே மிகவும் கடு­மை­யான தடைகள் தற்­போது விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

“நான் உலக சமா­தா­னத்தை விடவும் வேறு எத­னையும் கோர­வில்லை” என அவர் தெரி­வித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!