கொலை செய்வேன்- பொலிஸாருக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

ஊழலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொல்லப்போவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள காவல்துறையினரை சந்தித்தவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்தள்ளார்.

நீங்கள் இப்படியே மாறாமலிருந்தால் பெண்நாயி;ன் மகன்களே உங்களை நான் கொல்லுவேன் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவர்களின் முகத்திற்கு நேரே தெரிவித்துள்ளார்.

என்;னிடம் சிறப்பு பிரிவொன்று உள்ளது அது உங்களை வாழ்க்கை முழுவதும் கண்காணிக்கும் நீங்கள் சின்ன தவறிழைத்தால் கூட உங்களை கொலை செய்யுமாறு கேட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அவ்வாறு கொல்லப்பட்டால் மனித உரிமைகள் என அலறிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் நான் உங்களை ஏற்கனவே எச்சரித்துவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!