மனைவியை பழி வாங்குவதற்காக கதற, கதற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!!!

அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் கடந்த சனிக்கிழமை பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்குவதற்காக தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் இருவரையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிப்பாதாவது,

தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்குவதற்காக திட்டமிட்ட குறித்த நபர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மனைவிக்காக ஒரு பரிசை தயார் செய்துள்ளதாகவும் அதை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

பின்னர் அவரது 8 வயது ஆண் குழந்தையையும், 1 வயதேயான பெண் குழந்தையையும் கதற கதற கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு துப்பாக்கி ஒன்றினால் தலையில் சுட்டுக்கொண்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக குறித்த நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

இதனிடையே குழந்தைகளை கொலை செய்து விட்டு பிரெஞ்சு மொழியில் மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில்,

“எங்கள் மூவரின் மரணத்திற்கும் காரணம் நீ தான், இந்த இழப்பின் வழியை உன் வாழ் நாள் முழுவதும் நீ சுமக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது பிள்ளைகள் இருவரும் தனது காலை பிடித்துக் கொண்டு “அப்பா எங்களை மண்ணித்து விடுங்கள்!” என கதற கதற கழுத்ததை அறுத்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாயிடம் குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!