மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது – 21 மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17-ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி உட்பட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேரமல்லாத நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தனது இறுதி உரையில் மக்களுக்கும், மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் 17 முறை அவை கூட்டப்பட்டதாகவும், 112 மணி நேரங்கள் அவை நடைபெற்றதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!